இத்தாலியில் சொகுசு வில்லா வாங்கிய பிரபாஸ்


இத்தாலியில் சொகுசு வில்லா வாங்கிய பிரபாஸ்
x

வாடகைக்கு விட்டு மாதம் ரூ.40 லட்சம் சம்பாதிக்கிறார்

பாகுபலி படத்துக்கு பிறகு பிரபாஸ் மார்க்கெட் உயர்ந்தது. இவரை வைத்து ரூ.500 கோடி மற்றும் ரூ.600 கோடி என்றெல்லாம் செலவு செய்து பிரமாண்ட படங்களை உருவாக்குகிறார்கள். இந்தியா முழுவதும் பிரபாசுக்கு ரசிகர்கள் சேர்ந்துள்ளதால் அவரது படங்களை பான் இந்தியா படங்களாக எடுத்து வெளியிடுகின்றனர்.

ராமாயண கதையை மையமாக வைத்து தயராகி திரைக்கு வந்துள்ள ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்து இருந்த பிரபாஸ் தோற்றத்துக்கு விமர்சனங்கள் வந்தன. ஆனாலும் எதிர்ப்பையும் மீறி ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. ஒரு படத்துக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

இந்த நிலையில் பிரபாஸ் சம்பாதிக்கும் பணத்தை வைத்து வெளிநாடுகளில் சொத்துக்கள் வாங்கி குவிப்பதாகவும் இத்தாலியில் பல கோடிகள் கொடுத்து சொகுசு வில்லா ஒன்றை வாங்கி இருப்பதாகவும் படப்பிடிப்பு இல்லாத நாட்களில் ஜெட் விமானத்தில் தனது நண்பர்களுடன் இத்தாலி சென்று அந்த சொகுசு குடியிருப்பு பங்களாவில் ஓய்வு எடுப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த வில்லாவை சுற்றுலா பயணிகள் மற்றும் அங்குள்ள உள்ளூர் மக்களுக்கு வாடகைக்கு விடுவதாகவும் இதன் மூலம் அவருக்கு மாத வாடகையாக ரூ.40 லட்சம் வருவதாகவும் கூறப்படுகிறது.


Next Story