மெய்சிலிர்க்க வைக்கும் பிரமாண்ட காட்சிகள்... சலார் படத்தின் டிரைலர் வெளியானது...!


மெய்சிலிர்க்க வைக்கும் பிரமாண்ட காட்சிகள்... சலார் படத்தின் டிரைலர் வெளியானது...!
x

பிரபாஸ், பிருத்விராஜ் நடித்துள்ள 'சலார்' படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

சென்னை,

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சலார்'. இந்த படத்தில் 'பாகுபலி' திரைப்படத்தில் நடித்திருந்த பிரபாஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கே.ஜி.எப். திரைப்படத்தை தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் 'சலார்' படத்தையும் தயாரித்துள்ளது.

இந்த படத்தில் வரதராஜ மன்னார் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் பிரித்விராஜ் நடித்துள்ளார். நடிகை சுருதி ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த நிலையில், 'சலார்' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 7.19 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தது.

அதன்படி இன்று சரியாக 7.19 மணிக்கு 'சலார்' திரைப்படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானது. பின்னர் மற்ற மொழிகளுக்கான டிரைலர் ஒன்றன் பின் ஒன்றாக வெளியானது. மெய்சிலிர்க்க வைக்கும் பிரமாண்ட காட்சிகளுடன் உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பாகுபலிக்கு பிறகு தொடர் தோல்வியால் தத்தளித்து வரும் பிரபாஸுக்கு இந்த படம் மாபெரும் திருப்புமுனை படமாக அமையும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story