பிரபாசின் வலைத்தள பக்கம் முடக்கம்...! ரசிகர்கள் அதிர்ச்சி..!


பிரபாசின் வலைத்தள பக்கம் முடக்கம்...! ரசிகர்கள் அதிர்ச்சி..!
x

பிரபாசின் இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கம் மாயமாகி உள்ளது.

நடிகர் பிரபாஸ் முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் கணக்குகள் வைத்து திரைப்படங்கள் சம்பந்தமான புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பகிர்ந்து வருகிறார், சமீபத்தில் அவரது முகநூல் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கமும் மாயமாகி உள்ளது. பிரபாசின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கி இருக்கலாம் என்று சிலரும், பிரபாசே செயல் இழக்க வைத்து இருக்கலாம் என்று சிலரும் பேசி வருகிறார்கள். இது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகுபலி படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபல நடிகராக உயர்ந்தவர் பிரபாஸ். தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயாகனாக வலம் வருகிறார். பிரபாஸ் நடிப்பில் சாஹோ, ராதே ஷியாம். ஆதிபுருஷ் படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வந்தன.

தற்போது சலார் படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து நாக் அஸ்வின் இயக்கத்தில் கல்கி ஏடி 2898 என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் கமல்ஹாசன், அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே, திஷா பதானி ஆகியோரும் நடிக்கின்றனர். கமல்ஹாசன் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது.

1 More update

Next Story