கோடை சுற்றுலாவை கொண்டாடும் பிரியங்கா மோகன் புகைப்படங்கள் வைரல்


கோடை சுற்றுலாவை கொண்டாடும் பிரியங்கா மோகன் புகைப்படங்கள் வைரல்
x

கோடை சுற்றுலாவில் நேரத்தை கழித்து வரும் நடிகை பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தெலுங்கில் அறிமுகமாகி தமிழ் மொழியில் இன்று கொடி கட்டி பறப்பவர் நடிகை பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமானார். நானியுடன் சேர்ந்து அவர் நடித்த அத்திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கிய டாக்டர் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் அவர் தமிழுக்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களின் மனதை கவர்ந்தார்,

இதைத் தொடர்ந்து, டான் திரைப்படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இதையடுத்து சன் பிக்சர்ஸ் தயாரித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இறுதியாக தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் திரைப்படத்தில் மாறுபட்ட வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது கவினுடன் பெயரிடப்படாத படம், தெலுங்கில் நானியோடு 'சூர்யாவின் சனிக்கிழமை' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், கோடை விடுமுறைக்கு சுற்றுலா சென்றிருக்கும் பிரியங்கா மோகன் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். அவை தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

1 More update

Next Story