படம் எடுத்து சொத்தை இழந்தேனா? நடிகர் மாதவன் விளக்கம்


படம் எடுத்து சொத்தை இழந்தேனா? நடிகர் மாதவன் விளக்கம்
x

`ராக்கெட்ரி' படத்திற்கு பைனான்ஸ் செய்ததால் தன்னுடைய வீட்டை இழந்தார் என்று வெளியான செய்திக்கு நடிகர் மாதவன் விளக்கம் அளித்துள்ளார்.

மாதவன் நடித்து இயக்கிய ராக்கெட்ரி படம் கடந்த ஜூலை மாதம் தமிழ், இந்தி, ஆங்கில மொழிகளில் வெளியானது. தேச விரோத வழக்கில் கைதாகி சிறையில் சித்ரவதைகளை அனுபவித்து பின்னர் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை உண்மை சம்பவங்களை மையமாக வைத்து தயாராகி இருந்தது. ராக்கெட்ரி படத்தை தயாரிக்க மாதவன் பண உதவி செய்ததால் தனது வீட்டை இழந்து விட்டார் என்று சமூக வலைத்தளத்தில் ஒருவர் தெரிவித்து இருந்தார். இதனால் படத்துக்கு எதிர்பார்த்த வசூல் இல்லையா? மாதவன் வீட்டை விற்றது உண்மையா? என்று வலைத்தளத்தில் பலரும் கேள்வி எழுப்பினர்.

இதற்கு மாதவன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் மாதவன் வெளியிட்டுள்ள பதிவில், ''தயவு செய்து எனது தியாகத்துக்கு அதிக ஆதரவை தரவேண்டாம். நான் எனது வீட்டையோ, வேறு எதையும் இழக்கவில்லை. உண்மையில் ராக்கெட்ரி படத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் இந்த வருடம் அதிக வருமான வரியை செலுத்த இருக்கிறார்கள். கடவுள் அருளால், நாங்கள் அனைவரும் சிறந்த மற்றும் பெருமையான லாபத்தை பெற்று இருக்கிறோம். நான் இன்னும் எனது வீட்டில்தான் வசிக்கிறேன்" என்று கூறியுள்ளார்.


Next Story