மார்வெல் வெப்சீரிஸில் வரும் ரஜினி படத்தின் பாடல்..!


மார்வெல் வெப்சீரிஸில் வரும் ரஜினி படத்தின் பாடல்..!
x

மிஸ் மார்வல் வெப்சீரிஸில் ரஜினியின் பாடல் இடம் பெற்றுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் தயாரிப்பில் வெளியான 'ஸ்பைடர்மேன் நோ வே ஹோம்' மற்றும் டாக்டர் ஸ்ட்ரேன்ஜ் மல்டிவெர்ஸ் ஆஃப் மேட்னஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைப்படங்கள் மட்டுமின்றி மார்வெல் சூப்பர் ஹீரோக்களின் வெப்தொடர்களும் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன.

அந்த வகையில் இயக்குனர் பிஷா.கே அலி இயக்கத்தில் மிஸ் மார்வெல் வெப்தொடர் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகி வருகிறது. இந்த மிஸ் மார்வெல் தொடரில் இமான் வெல்லானி மிஸ் மார்வெல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மாட் லின்ட்ஸ், யஸ்மீன் ஃப்ளட்சர், ஷெனோபியா சோர்ஃப் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

வாரம் ஒரு எப்பிசோடாக வெளியாகவுள்ள இந்த வெப்தொடரின் முதல் எபிசோட் ஜூன் 8 அன்று வெளியானது. இந்த எப்பிசோடில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'லிங்கா' திரைப்படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான 'ஓ நண்பா' பாடல் ஒரு காட்சியில் இடம் பெற்றுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story