"ரஜினிகாந்த் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்" - சன்னி லியோன்


ரஜினிகாந்த் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் - சன்னி லியோன்
x

தனக்கு தமிழ், தெலுங்கு என மொழி பிரச்னை இல்லை என நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நவரச நாயகன் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் ஜெயமுருகன் இயக்கத்தில் 'தீ இவன்' திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நடிகை சுகன்யா, நடிகர்கள் சிங்கம் புலி, ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நடிகை சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்நிலையில் 'தீ இவன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை சன்னி லியோன், செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிப்பது தொடர்பான தனது அனுபவங்களை அவர் பகிர்ந்து கொண்டார்.

அப்போது தென் இந்தியாவில் அவருக்கு மிகவும் பிடித்த நடிகர் யார்? என்ற கேள்விக்கு, சன்னி லியோன் தனக்கு நடிகர் ரஜினிகாந்தை மிகவும் பிடிக்கும் என்று தெரிவித்தார். மேலும் தனக்கு தமிழ், தெலுங்கு என மொழி பிரச்சினை இல்லை என்று தெரிவித்த அவர், எந்த மொழியாக இருந்தாலும் நல்ல கதையும், கதாபாத்திரமும் இருந்தால் நடிக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

1 More update

Next Story