புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ரஜினியின் 'எந்திரன்' திரைப்படம்


புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகும் ரஜினியின் எந்திரன் திரைப்படம்
x
தினத்தந்தி 1 Jun 2023 3:20 PM IST (Updated: 1 Jun 2023 4:07 PM IST)
t-max-icont-min-icon

'எந்திரன்' திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகவுள்ளது

சென்னை,

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம் எந்திரன். ஷங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும், சந்தானம், கருணாஸ், தேவ தர்ஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார்.

இப்படத்தில் ரஜினி வசீகரன் என்ற விஞ்ஞானி வேடத்திலும், சிட்டி என்ற ரோபோ வேடத்திலும் நடித்திருந்தார். இதில் 'சிட்டி தி ரோபோ' போன்ற வசனங்கள் இன்றளவும் பேசும் வசனங்களாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்படத்தில் இடம்பெற்றிருந்த கிராபிக்ஸ் காட்சிகள் படத்திற்கு பலம் சேர்த்து பிரம்மாண்ட வெற்றியை பெற்று தந்தது. மேலும், கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படங்களின் வசூலை எந்திரன் திரைப்படம் முறியடித்து சாதனை படைத்தது.

இந்நிலையில், 'எந்திரன்' திரைப்படம் புதுப்பொலிவுடன் மீண்டும் வெளியாகவுள்ளது. அதாவது, முதல்முறையாக டிஜிட்டலில் ரீமாஸ்டர் செய்து 4k அல்ட்ரா எச்.டி.தரத்தில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷனில் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளது. இந்த திரைப்படம் ஜூன் 9-ல் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை பல நடிகர்களின் படங்கள் புதுப்பொலிவுடன் திரையரங்குகளில் வெளியான நிலையில் எந்திரன் திரைப்படம் முதல்முறையாக புதுப்பொலிவுடன் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


1 More update

Next Story