ரஜினியின் 'ஜெயிலர்' பட டீசர் வெளியானது - ரசிகர்கள் வரவேற்பு


ரஜினியின் ஜெயிலர் பட டீசர் வெளியானது - ரசிகர்கள் வரவேற்பு
x

ரஜினிகாந்தின் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த ‘டீசர்’ வெளியாகி இருக்கிறது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த டீசர் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆகஸ்டு மாதம் தொடங்கி. தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. இதில் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இன்னொரு முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடிக்கிறார். ஏற்கனவே ரஜினியின் தோற்றத்தை படக்குழுவினர் வெளியிட்டனர்

இந்தநிலையில் தற்போது ரஜினிகாந்தின் பிறந்தநாளையொட்டி, 'ஜெயிலர்' படத்தின் டீசர் நேற்று வெளியானது. முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் மிடுக்காக நடப்பது, ஸ்டைலாக கண்ணாடி அணிவது, கடைசியாக மிரட்டலாக வீச்சரிவாளை எடுப்பது போன்ற காட்சிகள் டிரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

ரஜினிகாந்தின் பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக இந்த 'டீசர்' வெளியாகி இருக்கிறது. இது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த டீசர் வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

'யூ-டியூப்'பில் வெளியான ஒரு மணி நேரத்திலேயே 10 லட்சம் பேர் இந்த டீசரை பார்த்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story