திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் கவலை இல்லை -சொல்கிறார் ராக்கி சாவந்த்


திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் கவலை இல்லை -சொல்கிறார் ராக்கி சாவந்த்
x

நான் எப்பொழுது கர்ப்பமாவேன்? திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் எனக்கு கவலை இல்லை என சர்ச்சைக்கு பேர்போன நடிகை ராக்கி சாவந்த் தெர்வித்து உள்ளார்.

மும்பை

பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட்டுக்கும், நடிகர் ரன்பீர் கபூருக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக ஜூன் 27ம் தேதி சமூக வலைதளத்தில் தெரிவித்தார் ஆலியா.

இது குறித்து பாலிவுட்டில் சர்ச்சைகளுக்கு பெயர் போன ராக்கி சாவந்திடம் கேட்கப்பட்டது. தன் காதலரான ஆதிலுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தபோது தான் ராக்கியிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள்.

நான் எப்பொழுது கர்ப்பமாவேன்? திருமணத்திற்கு முன்பே கர்ப்பமானாலும் எனக்கு கவலை இல்லை. நான் கர்ப்பமான மறுநாளே திருமணம் செய்து கொள்வேன்.

அனைத்தையும் சரியாக்கும் ஒரு நல்ல பிள்ளையை பெற்றெடுப்பேன் என்றார் வழக்கம் போல், ராக்கி இந்த செய்தியை டிரெண்டாக்கும் வாய்ப்பாக பயன்படுத்தி கொண்டார்.

ஆலியா பட் தற்போது லண்டனில் இருக்கிறார். ஹாலிவுட் படத்தில் நடிக்க சென்றுள்ளார். இதற்கிடையே திருமணத்திற்கு முன்பே ஆலியா பட் கர்ப்பமாகிவிட்டதாக பேச்சு கிளம்பியிருக்கிறது.

ஆலியா பட் கர்ப்பமாக இருப்பது குறித்து பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டரும், இயக்குநருமான பரா கானிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ, இது எனக்கு எப்போவோ தெரியும் என்று கூறிவிட்டு இடத்தை காலி செய்துவிட்டார்.



1 More update

Next Story