திருமணத்திற்கு பிறகு பெண்களிடம் மட்டும் ஏன் அதை எதிர்பார்க்கிறீர்கள்? - ரகுல் பிரீத் சிங்


திருமணத்திற்கு பிறகு பெண்களிடம் மட்டும் ஏன் அதை எதிர்பார்க்கிறீர்கள்? - ரகுல் பிரீத் சிங்
x

திருமணத்திற்குப் பிறகு ஆண்கள் இவ்வாறுதான் ஆடை அணிய வேண்டும் என்று எதாவது கட்டுப்பாடு இருக்கிறதா என்று ரகுல் பிரீத் சிங் கேள்வியெழுப்பியுள்ளார்.

மும்பை,

கன்னடத்தில் வெளியான கில்லி திரைப்படம் மூலம் 2009ம் ஆண்டு சினிமாவில் அறிமுகமானவர் ரகுல் பிரீத் சிங். தொடர்ந்து தெலுங்கில் சில படங்களில் நடித்த அவர், தமிழில் தடையற தாக்க மூலம் அறிமுகம் ஆனார். தொடர்ந்து என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே., அயலான் ஆகிய படங்களில் நடித்திருந்தார். ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்திலும் இவர் நடிக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் பிஸியான நடிகையாக வலம் வரும் ரகுல் பிரீத் சிங், தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில நாட்களுக்கு முன்பு கோவாவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில், செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள அவர் "நமது இந்திய சமுதாயத்தில் திருமணம் பற்றி மிகப்பெரிய கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறோம். இதனை ஒருவருடைய வாழ்வில் நடைபெறும் மிக இயல்பான விஷயமாக பார்க்க வேண்டும். திருமணத்திற்குப் பிறகு ஆண்கள் இவ்வாறுதான் ஆடை அணிய வேண்டும் என்று எதாவது கட்டுப்பாடு இருக்கிறதா? இல்லை அப்படிதானே. பெண்களிடம் மட்டும் ஏன் அதை எதிர்பார்க்கிறீர்கள்? காலம் மாறிவிட்டது. எல்லோரும் அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதை செய்கிறார்கள்" இவ்வாறு கூறினார்.


Next Story