'சாகுந்தலம்' படத்தில் இருந்து புதிய பாடலை வெளியிட்டது படக்குழு


சாகுந்தலம் படத்தில் இருந்து புதிய பாடலை வெளியிட்டது படக்குழு
x
தினத்தந்தி 18 April 2023 5:15 PM GMT (Updated: 18 April 2023 5:26 PM GMT)

சமந்தா நடித்த 'சாகுந்தலம்' படத்தில் இருந்து 'மகிமை ஆலயம்' என்ற வீடியோ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் சமந்தா நடித்த 'சாகுந்தலம்' திரைப்படம் கடந்த ஏப்ரல் 14-ந்தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு மணிசர்மா இசையமைத்துள்ளார்.

இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற 5 மொழிகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் 'மகிமை ஆலயம்' பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. கபிலன் வரிகளில் அனுராக் குல்கர்னி பாடியுள்ள இந்த பாடலின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.



Next Story