கேரள அரசின் திரைப்பட விருதுகள் ; ஜோஜு ஜார்ஜ் - பிஜு மேனன் சிறந்த நடிகர், சிறந்த நடிகை ரேவதி


கேரள அரசின் திரைப்பட விருதுகள் ; ஜோஜு ஜார்ஜ் - பிஜு மேனன் சிறந்த நடிகர், சிறந்த  நடிகை ரேவதி
x

2022 ஆம் ஆண்டின் கேரள அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கபட்டு உள்ளது. இதில் ஜோஜு ஜார்ஜ் - பிஜு மேனன் சிறந்த நடிகர்களுக்கான் விருதும் ; நடிகை ரேவதி க்கு சிறந்த நடிகைக்கான விருதும் கிடைத்து உள்ளது.

திருவனந்தபுரம்

52வது கேரள மாநில திரைப்பட விருதுகள் அறிவிக்கபட்டு உள்ளது. இதில் சுமார் 142 படங்கள் விருதுகளுக்காக பரிந்துரைக்கபட்டன. அவற்றில் 45 திரைப்படங்கள் இறுதிச் சுற்றுக்குதேர்ந்து எடுக்கபட்டன. பாலிவுட் திரைப்படத் தயாரிப்பாளரும், திரைக்கதை எழுத்தாளருமான சயீத் அக்தர் மிர்சா தலைமையிலான நடுவர் குழு, திரைப்படங்களை பகுப்பாய்வு செய்தது.

சிறந்த நடிகருக்கான விருதுக்கு பகத் பாசில், ஜோஜு ஜார்ஜ், பிஜு மேனன் ஆகிய மூன்று நடிகர்கள் பரிசீலிக்கப்பட்டனர்.

மகேஷ் நாராயணனின் 'மாலிக்' மற்றும் திலீஷ் போத்தனின் 'ஜோஜி' ஆகிய படங்களில் பகத் பாசிலின் நடிப்பு

நடுவர் மன்ற உறுப்பினர்களை பிரமிக்க வைத்தது.

'மதுரம்' மற்றும் 'நாயட்டு' படங்களில் ஜோஜு ஜார்ஜ் தனது நடிப்பால் ஈர்த்து இருந்தார்.

சானு வர்கீஸ் இயக்கிய 'அர்காரியம்' படத்தில் முதியவராக நடித்ததற்காக நடிகர் பிஜு மேனனின் பெயரும் இடம்பெற்று இருந்தது.

இதில் அர்காரியம்' படத்தில் நடித்ததற்காக பிஜு மேனன் சிறந்த நடிகருக்கான விருது பெற்றார்

பகத் பாசில் இதற்கு முன்பு 2013 இல் சிறந்த நடிகருக்கான விருதை லாலுடன் தனது 'ஆர்டிஸ்ட்' மற்றும் 'வடக்கு 24 காதம்' படங்களுக்காக பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோஜு ஜார்ஜ் 2019 ஆம் ஆண்டுக்கான 'ஜோசப்' படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை பெற்றார்.சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதை இரண்டு முறை வென்றவர் பிஜு மேனன்.

52வது கேரள மாநில திரைப்பட விருதுகளை கலாச்சாரத்துறை அமைச்சர் சாஜி செரியன் அறிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

சிறந்த நடிகர் - பிஜூ மேனன் ( அர்காரியம்) * 'நயாட்டு' மற்றும் 'ப்ரீடம் நைட்' படங்களில் நடித்ததற்காக ஜோஜு ஜார்ஜ் சிறந்த நடிகருக்கான விருதைபெற்றனர்.

* சிறந்த இயக்குனர் -திலீஷ் போத்தன் (ஜோஜி)

* 'ஜோஜி' படத்தில் நடித்ததற்காக உன்னி சிறந்த குணச்சித்திர நடிகை விருது பெற்றார்.

* சிறந்த இசையமைப்பாளர் - ஹிஷாம் அப்துல் வஹாப் (ஹிருதயம்)

* சிறந்த பாடகர்- பிரதீப் (மின்னல் முரளி)

* சிறந்த நடிகை - ரேவதி சில வருடங்களுக்குப் பிறகு மலையாள திரைக்கு திரும்பியநடிகை ரேவதி

ஷேன் நிகாம் நடித்த 'பூதகாலம்' திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்ததாகக் நடைகைஅயாக தேர்ந்து எடுக்கபட்டார்.

சிறந்த படம்- ( அவாஷ வியோகம் )

* சிறந்த பாடகி- சித்தாரா கிருஷ்ணகுமார் (கணேக்கனே)

* மெல்வி ஜேக் (மின்னல் முரளி)

* சிறந்த சினிமா புத்தகம் இழந்த கனவுகள் (ஆர் கோபாலகிருஷ்ணன்)

* சிறந்த தழுவல் திரைக்கதைக்கான விருதை 'ஜோஜி' படத்திற்காக ஷியாம் புஷ்கரன் பெற்றார்.

* சிறந்த ஒப்பனை- பட்டணம் ரஷீத்

* விஷுவல் எஃபெக்ட் விருது- ஆண்ட்ரூஸ் (மின்னல் முரளி)

* வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கிய 'ஹிருதயம்' திரைப்படம் சிறந்த பிரபலமான படத்திற்கான விருதை வென்றது.

* சிறந்த பாடலாசிரியருக்கான விருதை பி.கே.ஹரிநாராயணன் பெற்றார்


Next Story