ஜான்வி கபூருடன் இணைந்து நடனமாடிய ரிஹானா - வைரலாகும் வீடியோ


ஜான்வி கபூருடன் இணைந்து நடனமாடிய ரிஹானா - வைரலாகும் வீடியோ
x

ரிஹானா, ஜான்வியுடன் இணைந்து நடனமாடியது ஜான்வியின் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆமதபாத்,

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவருக்கும் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் வரும் ஜூலை மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், குஜராத் மாநிலம், ஜாம்நகரில் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் பாலிவுட் நட்சத்திரங்கள், விளையாட்டு பிரபலங்கள், உலக தொழிலதிபர்கள் உள்ளிட்ட ஏராளமான முக்கிய விருந்தினர்கள் வருகை தந்துள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக ஜாம் நகர் நட்சத்திர பட்டாளங்களால் நிறைந்துள்ளது.

இந்த கொண்டாட்டத்தில் பிரபல பாடகர் ரிஹானா கடந்த இரண்டு நாட்களாக தனது நிகழ்ச்சியை நடத்தினார். அவர் நிகழ்ச்சி நடத்தியது மட்டுமல்லாமல் பாலிவுட் நட்சத்திரங்களுடன் பார்ட்டியிலும் இணைந்து பங்கேற்றார். இந்த நிலையில் பார்ட்டியில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூருடன் இணைந்து ரிஹானா ஜிங்காத் பாடலுக்கு நடனமாடியுள்ளார்.

இந்த வீடியோவை ஜான்வி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். ரிஹானா, ஜான்வியுடன் இணைந்து நடனமாடியது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் பலரும் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



Next Story