பிரபல பத்திரிக்கை வெளியிட்ட ஆஸ்கர் கணிப்பு பட்டியலில் இடம்பிடித்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம்
‘வெரைட்டி’ பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பு பட்டியல் தற்போது இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஐதராபாத்,
சினிமா உலகின் மிக உயரிய விருதாகவும், கவுரவமிக்க விருதாகவும் ஆஸ்கர் விருது பார்க்கப்படுகிறது. இந்த ஆஸ்கர் விருதை அடுத்த ஆண்டு பெறுவதற்கான வாய்ப்புள்ள திரைப்படங்கள் குறித்த கணிப்புகள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் 'வெரைட்டி' என்ற பிரபல பத்திரிக்கை நிறுவனம் வெளியிட்டுள்ள கணிப்பு பட்டியல் தற்போது இந்திய ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்த கணிப்பு பட்டியலில் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர்., அஜய் தேவ்கன் உள்ளிட்டோர் நடித்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் இடம்பெற்றுள்ளது. அதன்படி சிறந்த வெளிநாட்டு திரைப்படம் மற்றும் சிறந்த பாடல்(நட்பு) ஆகிய பிரிவுகளின் கீழ் ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தேர்வு செய்யப்படலாம் என அந்த கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது உற்சாகமடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story