தனுசை பாராட்டிய ஹாலிவுட் நடிகர்


தனுசை பாராட்டிய ஹாலிவுட் நடிகர்
x

தனுஷ் ஒரு நம்ப முடியாத சிறந்த நடிகர் என்று 'தி கிரே மேன்' பட ஹாலிவுட் நடிகர் ரியான் காஸ்லிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த தனுஷ், இந்தி படங்களில் நடித்து வட மாநிலங்களிலும் பிரபலமானார். தொடர்ந்து ஹாலிவுட்டுக்கும் சென்றுள்ளார். அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கி பிரபலமான ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ சகோதரர்கள் டைரக்டு செய்துள்ள தி கிரே மேன் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் ரியான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், நடிகை அனா டி அர்மாஸ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார். இந்த படம் ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடிப்பை ஹாலிவுட் நடிகர் ரியான் காஸ்லிங் பாராட்டி உள்ளார். அவர் கூறும்போது, "தனுஷ் சிறந்த நடிகர். சண்டைக் காட்சியை நாங்கள் படமாக்கியபோது, அவர் எந்த தவறையும் செய்யவில்லை. சில காட்சிகளை பல தடவை மீண்டும் படமாக்கியபோதும் அவரது நடிப்பில் எந்த குறையும் தெரியவில்லை. தனுஷ் மிகவும் வேடிக்கையானவராக இருந்தார். தனுஷை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இதனால் அவரை எதிரியாக நினைத்து நடிக்க கஷ்டமாக இருந்தது" என்றார்.

ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸ் கூறும்போது "தனுஷ் கடின உழைப்பாளி. படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்" என்றார்.

1 More update

Next Story