ஆசிரமத்தில் சமந்தா தியானம்


ஆசிரமத்தில் சமந்தா தியானம்
x

கோவை ஈஷா யோகா மையத்துக்கு நடிகை சமந்தா சென்றுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சென்னை,

நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி சிகிச்சை பெற்றார். இதனால் சினிமாவை விட்டும் சில மாதங்கள் ஒதுங்கியும் இருந்தார். சிகிச்சைக்கு பின் உடல்நிலை தேறி மீண்டும் நடிக்க வந்துள்ளார். அதோடு 'பாட்காஸ்ட்' மூலம் ஆரோக்கிய விஷயங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்வதை போன்ற புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமந்தா இன்று வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களை பகிர்ந்து சமந்தா பதிவிட்டிருப்பதாவது: "நம்மில் பலரும் குரு அல்லது வழிகாட்டியைத் தேடுகிறோம். நம் வாழ்க்கையை ஒளிரச் செய்பரைக் கண்டால், அது அரிய பாக்கியமாகும். ஞானம் வேண்டுமென்றால், அதனை உலகில் நீங்கள்தான் தேட வேண்டும். ஏனென்றால் நாள்தோறும் உங்கள் மீது பல்வேறு விஷயங்கள் திணிக்கப்படுகிறது. ஞானத்தை பெறுவது சாதாரணமானது அல்ல. அதற்காக நீங்கள்தான் உழைக்க வேண்டும். நீங்கள் பலவற்றை தெரிந்து வைத்துக் கொள்வது மட்டும் போதாது. அதனை செயல்படுத்துவதே முக்கியமானது." எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி கோவை ஈஷா யோகா மையத்துக்கு செல்லும் சமந்தா தியானத்தில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

1 More update

Next Story