கவர்ச்சி புகைப்படம் பகிர்ந்த சமந்தா: கருத்து பதிவிட்ட தமன்னா- வைரல்

image courtecy:instagram@samantharuthprabhuoffl
நடிகை சமந்தாவின் கவர்ச்சி புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார். பின்னர் மயோசிடிஸ் அழற்சி நோய் காரணமாக படாதபாடு பட்டார். இதற்காக அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்தார். மயோசிடிஸ் நோய் பாதிப்பில் சிக்கியதால் ஒரு வருடம் நடிக்காமல் இருந்தார். சிகிச்சைக்கு பின்னர் நோய் தாக்கத்தில் இருந்து விடுபட்டுள்ள சமந்தா, மீண்டும் படங்களில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார்.
தற்போது, சமூகவலைதளங்களில் புகைப்படங்கள் பகிர்வது, ரசிகர்களுடன் உரையாடுவது எனத் தன்னை பிசியாக வைத்துக்கொண்டு வருகிறார். இந்நிலையில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதனுடன் 'இது பேஷன் பேபி' என்றும் பதிவிட்டிருந்தார். அதனை பார்த்த ரசிகர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பிரபல நடிகை தமன்னாவும் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் ஒருவர், 'ஏற்கனவே வானிலை சூடாக உள்ளது, இது அதை மேலும் உயர்த்துகிறது' என்றும் மற்றொருவர், 'ஏப்ரல் சூடாக உள்ளது. அது ஏன் என்று இப்போது தெரிகிறது' என்றும், மேலும் ஒருவர் 'பேஷனின் தாய்' என்றும் தெரிவித்துள்ளனர். நடிகை தமன்னா இந்த புகைப்படத்திற்கு நெருப்பு எமோஜை பதிவிட்டுள்ளார். மேலும், ரகுல் பிரீத் சிங், வருண் தவான் உள்ளிட்டோர் லைக் செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.






