பெண்களுக்காக 'ஆதிசக்தி' அமைப்பு தொடங்கிய வாத்தி பட நடிகை


பெண்களுக்காக ஆதிசக்தி அமைப்பு தொடங்கிய வாத்தி பட நடிகை
x

image courtecy: instagram@iamsamyuktha_

பெண்களுக்கு உதவும் வகையில் ‘ஆதிசக்தி' என்ற அமைப்பை நடிகை சம்யுக்தா தொடங்கியுள்ளார்.

சென்னை,

தமிழில் தனுஷ் ஜோடியாக 'வாத்தி' படத்தில் நடித்து பிரபலமானவர் சம்யுக்தா மேனன். பின்னர், 'களறி' என்ற படத்திலும் நடித்து இருந்தார். தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது ஆதரவு இல்லாமல் நிர்கதியாக நிற்கும் பெண்களுக்கு கை கொடுத்து உதவ முன்வந்து இருக்கிறார் சம்யுக்தா மேனன். இதற்காக 'ஆதிசக்தி' என்ற அமைப்பை தொடங்கி இருப்பதாக அவர் தெரிவித்து உள்ளார். இதுகுறித்து சம்யுக்தா மேனன் கூறும்போது, "பெண்கள் தன்மானத்தோடு வாழ்வதற்காகவும், எல்லா துறைகளிலும் முன்னேற வேண்டும் என்பதற்காகவும் இந்த அமைப்பை தொடங்கி இருக்கிறேன்.

கல்வி, வேலைவாய்ப்பு, பயிற்சி, ஆரோக்கியம் போன்ற விஷயங்களில் எங்கள் அமைப்பு பெண்களுக்கு ஆதரவாக நிற்கும். அனைத்து வயதுடைய பெண்களுக்கும் நாங்கள் கை கொடுப்போம். பெண்களுக்கு சம வாய்ப்புகள் ஏற்படுத்தி அவர்களை முன்னேற்ற பாதையில் நடத்த வேண்டும் என்பது எங்கள் அமைப்பின் லட்சியம்'' இவ்வாறு கூறினார்.

1 More update

Next Story