ஷாருக்கானின் பதான் ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது


ஷாருக்கானின் பதான் ரிலீஸுக்கு முன்பே பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது
x

பதான் படத்தின் ஆன் லைன் டிக்கெட் விற்பனை அமோகமாக உள்ளது. சுமார் 10 லட்சம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன.

மும்பை

நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு, பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் பதான் நாளை வெளியாக உள்ளது. அவர் ஜீரோ (2019)க்குப் பிறகு பல படங்களில் தோன்றியுள்ளார், ஆனால் அவை அனைத்தும் கெஸ்ட் ரோல்களாக இருந்தன. நீண்ட நாட்களுக்குப் பிறகு, தீபிகா படுகோனே மற்றும் ஜான் ஆபிரகாமுடன் ஷாருக்கான் படம் பதான் நாளை வெளியாகிறது.

பதானுக்கான முன்பத்வு டிக்கெட் விற்பனை இந்தியாவிலும் வெளிநாட்டிலும் விறுவிறுப்பான வேகத்தில் நடந்து வருகிறது. ஜனவரி 23, திங்கட்கிழமை நள்ளிரவு வரை பிவிஆர் , ஐநாக்சஸ் மற்றும் சினிபோலிஸ் ஆகிய மூன்றில் பதான் 4.19 லட்சம் டிக்கெட்டுகளை விற்றதாக கூறப்படுகிறது.எனவே, 4.10 லட்சம் டிக்கெட்டுகள் விற்ற முந்தைய சாதனையான பதான் முறியடித்தது.

பதான் இப்போது சுமார் 5.25 முதல் 5.50 லட்சம் டிக்கெட்டுகளை விற்க இலக்கு வைத்துள்ளது. இந்தி மார்கெட்டில் கேஜிஎப் 2 இன் ஒட்டுமொத்த முன்பதிவுகளிலும் இப்படம் முதலிடத்தைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கேஜிஎப் 2 (இந்தி மொழிமாற்றம்) 5.15 லட்சம் டிக்கெட்டுகளை விற்றது.

பதான் படத்தின் ஆன் லைன் டிக்கெட் விற்பனை அமோகமாக உள்ளது. சுமார் 10 லட்சம் டிக்கெட்டுகள் ஏற்கனவே விற்கப்பட்டுள்ளன.

சர்வதேச விநியோக துணைத் தலைவர் நெல்சன் டிசோசா கூறும் போது

ஷாருக்கான் நடித்த பதான் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளது. இது இதுவரை இந்தியப் படங்களிலேயே இல்லாத அளவுக்கு இந்தப் படம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் வெளியாகிறது.

உலக அளவில் இந்தியப் படமொன்றுக்கு இதுவே அதிக நாடுகளில் வெளியாகிறது. ஷாருக்கான் சர்வதேச அளவில் மிகப்பெரிய சூப்பர் ஸ்டாராக இருக்கிறார். மேலும் படம் எடுத்துச் செல்லும் ஹைப்பால் பதான் உலகம் முழுவதும் வெளியிடப்பட வேண்டும் என்ற இணையற்ற தேவை உள்ளது. என கூறினார்.

பதான் தெலுங்கிலும், தமிழிலும் வெளியாகிறது. மேலும் தென்னிந்தியாவும் படத்தின் டிக்கெட் விற்பனையில் பெரும் பங்களிப்பை அளித்துள்ளது.

புக் மை ஷோவின் தகவல் படி, இந்திக்கு அடுத்தபடியாக பதானின் தெலுங்கு பதிப்பில் அதிக முன்பதிவு டிக்கெட் விற்பனை ஆகி உள்ளது.முன்பதிவு டிக்கெட் விற்பனையில் 30 சதவீதம் தென்னிந்தியாவில் இருந்து வந்துள்ளது,

சைபீரியாவில் உறைந்த பைக்கால் ஏரியில் பதான் நடித்த படம் எடுக்கப்பட்டு உள்ளது.மேலும், அங்கு படமாக்கப்பட்ட முதல் இந்தியப் படம் இதுவாகும்.

படத்தின் டைரக்டர் சித்தார்த் ஆனந்த் கூறும் போது , இதுவரை எந்த இந்தியப் படமும் முயற்சி செய்யாத ஆக்ஷன் காட்சிகளை மட்டுமே நாங்கள் படமாக்கியுள்ளோம். மக்களுக்கு சிறந்த காட்சியை வழங்கும் என பதான் உறுதியளிக்கிறது, மேலும் சைபீரியாவில் உள்ள அதிர்ச்சியூட்டும் உறைந்த பைக்கால் ஏரியில் அதிவேக பைக் துரத்தல் காட்சியை படமாக்கியுள்ளோம் என கூறினார்.


Next Story