கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா' படத்தின் படப்பிடிப்பு நிறைவு


கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ரகு தாத்தா படத்தின் படப்பிடிப்பு நிறைவு
x

Image Courtesy : @hombalefilms twitter

'ரகு தாத்தா' திடைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழில் 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். முன்னாள் கதாநாயகி மேனகாவின் மகளான கீர்த்தி சுரேஷ், நடிகையர் திலகம் படத்திற்காக தேசிய விருது பெற்றார். 'சாணிக்காயிதம்' படத்தில் இவரது கதாபாத்திரமும், நடிப்பும் பேசப்பட்டது.

தெலுங்கில் நானி ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்த 'தசரா' திரைப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மாமன்னன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும் ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிப்பில் 'ரகு தாத்தா' என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். சுமன் குமார் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

இந்நிலையில் 'ரகு தாத்தா' திடைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்துள்ளது. படப்பிடிப்பு நிறைவு பெற்றதை படக்குழுவினர் கீர்த்தி சுரேஷுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இறுதி கட்ட பணிகளை விரைவில் முடித்து இந்த ஆண்டு இறுதியில் இப்படத்தை திரைக்குக் கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது.
Next Story