பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் பிறந்தநாள் இன்று


பின்னணி பாடகி ஷ்ரேயா கோஷல் பிறந்தநாள் இன்று
x

"ஆல்பம்" திரைப்படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய "செல்லமே செல்லம் என்றாயடா" என்ற பாடலை பாடி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

எந்த மொழியில் பாடினாலும் உற்சாகம், துள்ளல், மகிழ்ச்சி,இன்பம், ஆச்சரியம் சோகம், துக்கம், இரக்கம், என்று கேட்பவரின் மனதில் எல்லா உணர்வுகளையும் கடத்தி விடுவதுதான் ஷ்ரேயா கோஷலை பெரிய வெற்றி பெற வைக்கிறது. 'சில்லுனு ஒரு காதல்' உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் மேற்பட்ட இனிமையான பாடல்களை பாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

23 வருடங்களாக திரைப்பட உலகில் வெற்றி நடை போடும் பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷல் மேற்கு வங்கத்தில் பிறந்தவர். தனது உருக வைக்கும் குரலால் உலகமெங்கும் பல மொழிகளில் பாடுகிறார்.

தேவதாஸ் படத்தில் பாடிய பாடல்கள் இவருக்கு தேசிய விருது, பிலிம்பேர் விருது பெற்று தந்தது. இந்தியாவின் அனைத்து மொழி இசை அமைப்பாளர்களின் பார்வையும் இவர் மேல் விழுந்தது. தமிழில் முதல் பாடலை கார்த்திக் ராஜா இசையில் வசந்த பாலன் இயக்கத்தில் வெளிவந்த "ஆல்பம்" திரைப்படத்தில் நா. முத்துக்குமார் எழுதிய "செல்லமே செல்லம் என்றாயடா" என்ற பாடலை பாடி தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.

பார்த்திபனின் 'இரவின் நிழல்' படத்தில் இடம்பெறும் 'மாயவா... சாயவா...' பாடலை பாடிய இவருக்கு தேசிய விருது கிடைத்துள்ளது.

1 More update

Next Story