படப்பிடிப்பில் பங்கேற்க ஆட்டோவில் சென்ற சுருதிஹாசன் - வீடியோ வைரல்

image courtecy:instagram@shrutzhaasan
படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற சுருதிஹாசன் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.
மும்பை,
தமிழ், தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்த சுருதிஹாசன் தற்போது மும்பையில் தங்கி இருக்கிறார். அங்கு ஒரு படப்பிடிப்பில் பங்கேற்க சென்ற சுருதிஹாசன் போக்குவரத்து நெரிசலில் சிக்கினார்.
காரில் அவரால் தொடர்ந்து பயணிக்க முடியவில்லை. இதையடுத்து காரை ஒதுக்கி நிறுத்தி விட்டு ஆட்டோ பிடித்து அதில் பயணம் செய்தார். ஆட்டோவில் சென்ற வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.
சுருதிஹாசன் ஆட்டோவில் சென்றது புத்திசாலித்தனமான முடிவு என்று ரசிகர்கள் பாராட்டினர். குறிப்பாக மும்பையில் சமீப காலமாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கிறது. இதில் காரை விட ஆட்டோவில் போவதே சிறந்தது என்கின்றனர்.
அமிதாப்பச்சனும் சமீபத்தில் போக்குவரத்து நெரிசலால் காரை ஒதுக்கி விட்டு ஆட்டோவில் பயணித்த சம்பவம் நடந்தது. இது நேரத்தை மிச்சப்படுத்துவது மட்டுமின்றி சுற்றுச்சூழலுக்கும் சிறந்தது. நடிகர்களுக்கு சரியான நேரத்தில் படப்பிடிப்புக்கு செல்லவும் உதவுகிறது என்கின்றனர்.






