நடிகர் வெங்கல் ராவுக்கு உதவிய சிம்பு


நடிகர் வெங்கல் ராவுக்கு  உதவிய சிம்பு
x

நடிகர் வெங்கல் ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கை கால்கள் செயல் இழந்துள்ளது.

சென்னை,

தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். இவர் வடிவேலுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தன. வெங்கல்ராவ் நடிக்க வருவதற்கு முன்பு சண்டை காட்சிகளில் நடிகர்களுக்கு டூப் போட்டார். ஒரு காட்சியில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் சண்டை காட்சிகளில் நடிப்பதை நிறுத்திவிட்டு காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கினார்.

கந்தசாமி, தலைநகரம், சீனா தானா 007, எலி உள்ளிட்ட பல படங்களில் வெங்கல் ராவின் காமெடிக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. சமீபகாலமாக அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. தற்போது வெங்கல் ராவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு கை கால்கள் செயல் இழந்துள்ளது.

ஒரு கை, ஒரு கால் செயலிழந்து வீட்டில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் கூறி சினிமா தொழிலாளர்கள் தனக்கு உதவ வேண்டுமென்று நேற்று வீடியோ வெளியிட்டு இருந்தார் வெங்கல் ராவ். இந்தநிலையில் நடிகர் வெங்கல் ராவ்வின் சிகிச்சைக்கு நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

1 More update

Next Story