''ஸ்டார்' திரைப்படம் வெற்றி பெற சிம்பு வாழ்த்து
நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'.
சென்னை,
'டாடா' படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் கவின் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'ஸ்டார்'. இந்த படத்தை 'பியார் பிரேமா காதல்' படத்தை இயக்கி பிரபலமான இளன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் லால், அதிதி போஹங்கர், பிரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.பி.வி.எஸ்.என்.பிரசாத், ஶ்ரீநிதி சாகர் ஆகியோர் தயாரித்துள்ள இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரதீப் இ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.
'ஸ்டார்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த நிலையில் 'ஸ்டார்' திரைப்படம் வெற்றி பெற நடிகர் சிம்பு தனது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Wishing the entire team of #STAR ⭐️ for the grand release tomorrow.
— Silambarasan TR (@SilambarasanTR_) May 9, 2024
Hope this film resonates with everyone chasing their dreams @Kavin_m_0431 @elann_t @thisisysr @aaditiofficial @PreityMukundan @LalDirector @riseeastcre @PentelaSagar @Ezhil_DOP pic.twitter.com/9R1sXtP65m