சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'மாவீரன் '
மாவீரன் படத்தின் சண்டை காட்சிகளுடன் சிறப்பு வீடியோவையும் படக்குழுவினர்
சென்னை,
'டான்' படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது 'பிரின்ஸ்' என்ற படத்தில் நடித்து வருகிறார். அனுதீப் இயக்கும் இந்த படத்தில் ரியா போஷாப்கா கதாநாயகியாகவும், சத்யராஜ் முதன்மை கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இந்த படத்தை தொடர்ந்து 'மண்டேலா' பட இயக்குனர் அஸ்வினுடன் இணைந்து புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். ஜோடியாக இந்தி நடிகை கியாரா அத்வானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த படத்துக்கு 'மாவீரன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது ,மாவீரன் படத்தின் சண்டை காட்சிகளுடன் சிறப்பு வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளார்.இதனை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Happy to share the annoucement video of my next film with @madonneashwin and @ShanthiTalkies https://t.co/NUtQfDhBhy@iamarunviswa @bharathsankar12 @vidhu_ayyanna@philoedit @Kumar_gangappan @sivadigitalart
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 15, 2022