சிவகார்த்திகேயனின் ஆருடம் பலிக்குமா?


சிவகார்த்திகேயனின் ஆருடம் பலிக்குமா?
x

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டு, தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான 'டான்' படம் நல்ல வசூலைக் குவித்தது. தற்போது 'பிரின்ஸ்' என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

'பிரின்ஸ்' படம் வருகிற விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் படத்தின் 'ரிலீஸ்' தேதி தள்ளி வைக்கப்பட்டு, தீபாவளி தினத்தன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதற்கு காரணம் சிவகார்த்திகேயன்தான் என்று தற்போது தெரியவந்துள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் 'சீமராஜா' படம் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று வெளியானது. ஆனால் இந்த படம் தோல்வி அடைந்தது.

இதை மனதில் வைத்துதான் 'பிரின்ஸ்' படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைக்க தயாரிப்பாளரிடம் சிவகார்த்திகேயன் வற்புறுத்தியுள்ளார். இதனைத் தொடர்ந்தே 'பிரின்ஸ்' படத்தின் 'ரிலீஸ்' தேதி மாற்றப்பட்டிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் இந்த ஆருடம் நிச்சயம் பலிக்க வேண்டுமென அவரது ரசிகர்கள் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்.

1 More update

Next Story