பேய் கதையில் சோனியா அகர்வால்


பேய் கதையில் சோனியா அகர்வால்
x

சோனியா அகர்வால் நடித்துள்ள புதிய படத்துக்கு `7 ஜி' என்று பெயர் வைத்துள்ளனர். ஸ்மிருதி வெங்கட்டும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஹாரூன் தயாரித்து டைரக்டு செய்கிறார்.

ஏற்கனவே 2004-ல் வெளியான `7 ஜி ரெயின்போ காலனி' படத்தில் சோனியா அகர்வால் நடித்து இருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் நிலையில் `7 ஜி' என்ற பெயரில் படம் தயாராவது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து டைரக்டர் ஹாரூன் கூறும்போது, ``பேய் படமாக `7 ஜி' உருவாகிறது. இது வித்தியாசமான திகில் படமாக இருக்கும். `7ஜி' தலைப்புக்கு யாரும் உரிமை கோராததால் அந்தப் பெயரை வைத்தோம். அதே எண் கொண்ட வீட்டில் படப்பிடிப்பை நடத்தியதால் படத்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று கருதி தலைப்பை பயன்படுத்தினோம்.

இந்த தலைப்புக்கும் ஏற்கனவே சோனியா அகர்வால் நடித்த படத்தின் தலைப்புக்கும் இருந்த தொடர்பு பிறகுதான் தெரிந்தது. 7 ஜி பெயரை படத்துக்கு வைக்கக் கூடாது என்று போனில் மிரட்டும் தொனியில் சிலர் பேசினார்கள். பெயரை மாற்ற மாட்டோம். சட்டப்படி சந்திப்போம்'' என்றார்.

1 More update

Next Story