'சூது கவ்வும்' 2-ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது


சூது கவ்வும் 2-ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது
x

வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள 'சூது கவ்வும்' 2-ம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

சென்னை,

கடந்த 2013-ம் ஆண்டு நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் 'சூது கவ்வும்'. இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக்செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது.

'சூது கவ்வும் 2' படத்தை இயக்குனர் எம்.எஸ்.அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு பதிலாக நடிகர் 'மிர்ச்சி' சிவா நடிக்கிறார். இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும், முக்கிய கதாபாத்திரத்தில் கருணாகரன் நடிக்கிறார்.படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் கே தில்லை, இசையமைப்பாளர் எட்வின் லூயிஸ் விஸ்வநாத் மற்றும் எடிட்டர் இக்னேஷியஸ் அஸ்வின் ஆகியோர் உள்ளனர்.

இந்த நிலையில் சூது கவ்வும் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள அந்த போஸ்டர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


Next Story