பிளஸ் 2 வரையே படிப்பு... குரோர்பதியில் ரூ.1 கோடி வென்று சாதித்த பெண்


பிளஸ் 2 வரையே படிப்பு... குரோர்பதியில் ரூ.1 கோடி வென்று சாதித்த பெண்
x

பிளஸ் 2 வரையே படித்த பெண் குரோர்பதி குவிஸ் நிகழ்ச்சியில் ரூ.1 கோடி பரிசு வென்று சாதித்து உள்ளார்.



புனே,



கோன் பனேகா குரோர்பதி 14 என்ற குவிஸ் நிகழ்ச்சியானது (கேள்வி பதில்) கடந்த ஆகஸ்டு 7-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில், நிறைய பேர் போட்டியாளர்களாக கலந்து கொண்டு வருகின்றனர். இந்த நிகழ்ச்சியை நடிகர் அமிதாப் பச்சன் கேள்விகள் கேட்டு வழிநடத்துகிறார்.

இதன் முதல் எபிசோடில் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் ஆமீர்கான், குத்து சண்டை வீராங்கனை மேரி கோம் மற்றும் விளையாட்டு வீரர் சுனில் சேத்ரி, மேஜர் டி.பி. சிங், வீரதீர விருது பெற்ற முதல் பெண் அதிகாரியான மிதாலி மதுமிதா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முதல் முறையாக கவிதா சாவ்லா என்ற பெண் ரூ.1 கோடி பரிசு தொகையை வென்று சாதித்து உள்ளார். மராட்டியத்தின் கோலாப்பூரில் வசிப்பவர் கவிதா. இல்ல தலைவியாக இருந்து வரும் அவர் பிளஸ் 2 வரையே படித்து உள்ளார். எனினும், சாதனை செய்வதற்கான முயற்சியில் அவர் வெற்றி பெற்றுள்ளார். மற்றவர்களுக்கும் எடுத்துக்காட்டாக திகழ்கிறார்.

குரோர்பதி நிகழ்ச்சி திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் இரவு 9 மணிக்கு சோனி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. இதனுடன் நிகழ்ச்சி முடியவில்லை. அடுத்த கேள்விக்கு கவிதா சரியாக பதில் கூறினால் அவர் ரூ.7.5 கோடி பரிசு தொகையை வெல்வார்.




Next Story