அவமானங்களையும், கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டேன்- கேன்ஸ் படவிழாவில் சன்னிலியோன் உருக்கம்


அவமானங்களையும், கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டேன்- கேன்ஸ் படவிழாவில் சன்னிலியோன் உருக்கம்
x

ஆபாச படவுலகில் இருந்து இந்திய சினிமாவுக்கு மாறும்போது அவமானங்களையும், கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டேன் என கேன்ஸ் படவிழாவில் சன்னிலியோன் கூறி உள்ளார்.

கேன்ஸ்

அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்கா கேன்ஸ் பட விழாவில் சன்னி லியோன், ராகுல் பட் மற்றும் இயக்குனர் அனுராக் காஷ்யப் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.படத்தின் பிரீமியருக்கு, சன்னி ஒரு தோள்பட்டை வெளிர் இளஞ்சிவப்பு நிற கவுனை அணிந்திருந்தார்.

அனுராக் காஷ்யப் இயக்கிய கென்னடி திரைப்படத்தின் பிரீமியர் காட்சிக்காக கேன்ஸில் இருக்கும் சன்னி லியோன், "இன்று வரையிலான எனது கேரியரில் இது மிகவும் அற்புதமான தருணங்களில் ஒன்றாகும்" என்று கூறி உள்ளார்.

மேலும் ஆபாச படத்துறையில் இருந்து இந்திய சினிமாவுக்கு மாறும் போது தான் அவமானங்களையும், பல கொலை மிரட்டல்களையும் எதிர்கொண்டதாக கூறினார்.

சன்னி தனது சினிமா வாழ்க்கையின் தொடக்கத்தில் பலவிதமான விமர்சனங்களையும் அவதூறுகளையும் சந்திக்க வேண்டியிருந்தது.ஆனால் தனது கடின உழைப்பால் தன்னை விமர்சித்த அனைவரையும் சன்னி லியோன் ரசிகர்களாக மாற்றினார். ஆரம்ப நாட்களில் பல முன்னணி நடிகர்கள் சன்னியுடன் நடிக்க மறுத்துவிட்டனர்.

சன்னி லியோன் தனது அணுகுமுறையின் மூலம் ரசிகர்களின் இதயங்களை வென்றவர். அவரது பயணம் முழுவதும் அவரது கணவர் டேனியல் வெப்பர் அவருக்கு ஆதரவாக இருந்தார். சன்னி லியோன் தனது கணவர் டேனியல் வெப்பர் எப்படி ஆபாச படங்களில் தன்னுடன் இணைந்தார் என்பது குறித்து மனம் திறந்து கூறி உள்ளார்.

சன்னி லியோனும் டேனியல் வெப்பரும் காதலித்தபோது, சன்னிக்கு மற்ற ஆண்களுடன் நடிப்பது பிடிக்கவில்லை, அதனால் தான் டேனியலும் ஆபாசத் துறையில் நுழைந்தார்.பின்னர் இருவரும் ஆபாச படங்களில் நடிக்க ஆரம்பித்தனர். ஒப்பந்தத்தில் கையெழுத்திட சன்னிக்கு டேனியல் உதவினார்.

இது குறித்து சன்னிலியோன் கூறும் போது எங்களுக்குள் ஆழமான உறவு இருந்தது. நாங்கள் நிறைய பேசிக் கொண்டோம், ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொண்டோம், மற்ற நடிகர்களுடன் ஆபாச படங்களில் நடிப்பது எனக்குப் பிடிக்காததால் என்னுடன் நடிப்பதற்காகவே அவர் இந்த துறைக்கு வந்தார். பின்னர் நாங்கள் சொந்த நிறுவனத்தைத் தொடங்கினோம். முதல் பார்வையிலேயே டேனியலை காதலித்தேன்.

நாங்கள் இருவரும் வேகாஸில் சந்தித்தவுடன் ஒருவரை ஒருவர் விரும்பினோம். ஆனால் சிறிது நேரம் மட்டுமே பேசிக் கொண்டோம். மின்னஞ்சல் ஐடி மற்றும் தொலைபேசி எண்ணை பரிமாறிக்கொண்டோம் தொடக்கத்தில் எங்களுக்குள் அதிக தொலைபேசி உரையாடல்கள் இல்லை, ஆனால் நாங்கள் நிறைய மின்னஞ்சல்களை அனுப்பினோம். எங்கள் முதல் டேட்டிங்குக்கு நான் தாமதமாக வந்தேன். ஆனால் அவர் எனக்காக மிகவும் பொறுமையாக காத்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். மிக அழகான தருணங்கள் அவை.

மூன்று மணி நேரம் நம்பிக்கை, கலாச்சாரம் பற்றி பேசினோம். 3மணி நேரம் போனது தெரியவில்லை 3 மாதங்களுக்குப் பிறகு என் அம்மா இறந்துவிட்டார். அந்த நேரத்தில் டேனியல் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் ஆதரவாக இருந்தார்.

பிரச்சனைகளில் இருந்து ஓடாமல் டேனியல் எனக்காக கூட இருந்தார் என கூறி உள்ளார்.


Next Story