சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


சன்னி லியோன் நடித்துள்ள ஓ மை கோஸ்ட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!
x

நடிகை சன்னி லியோன் நடித்துள்ள 'ஓ மை கோஸ்ட்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

நடிகை சன்னி லியோன், தமிழில் தயாராகும் வரலாற்று பின்னணியிலான பேய் படத்தில் நடிக்கிறார். இதில் அவர் நகைச்சுவை பேய் வேடத்தில் வருகிறார். இந்த படத்துக்கு, 'ஓ மை கோஸ்ட்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குனர் யுவன் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சன்னி லியோனுடன் நகைச்சுவை நடிகர் சதீஷ், 'குக் வித் கோமாளி' புகழ் தர்ஷா குப்தா, சஞ்சனா, யோகி பாபு, தங்கதுரை, திலக் ரமேஷ், ஜி.பி. முத்து உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை வாவ் மீடியா என்டர்டெயின்மென்ட் மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் வீர சக்தி மற்றும் கே சசி குமார் இணைந்து தயாரித்துள்ளனர்.

இந்த படத்துக்கு ஜாவேத் ரியாஸ் இசையமைத்துள்ளார். தீபக் டி.மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி 'ஓ மை கோஸ்ட்' திரைப்படம் வருகிற டிசம்பர் 30-ந்தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





Next Story