'ஜெயிலர்' படத்தில் ரஜினியுடன் இணையும் தமன்னா


ஜெயிலர் படத்தில் ரஜினியுடன் இணையும் தமன்னா
x
தினத்தந்தி 12 Aug 2022 11:43 AM IST (Updated: 12 Aug 2022 11:43 AM IST)
t-max-icont-min-icon

ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சென்னை,

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் 169-வது படம் ஜெயிலர். இதில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும்,ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அல்லது 22 -ஆம் தேதிகளில் தொடங்கப்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜெயிலர் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story