மலையாள சினிமாவில் இருந்து தமிழக நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்-தயாரிப்பாளர் கே. ராஜன்


மலையாள சினிமாவில் இருந்து தமிழக நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்-தயாரிப்பாளர் கே. ராஜன்
x

மலையாள சினிமாவில் இருந்து தமிழக நடிகர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என தயாரிப்பாளர் கே. ராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

எஸ்.வி.கே.ஏ. மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் ஆர். மணி பிரசாத் இயக்கத்தில், புதுமுகங்கள் நடிப்பில், மாறுபட்ட காதல் திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'என் சுவாசமே'. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் படக்குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசும்போது, சுவாசம் இல்லை என்றால் உயிர் இல்லை, அன்பு இல்லை, உணர்வில்லை, சுவாசம் என்பதே உயிர் வாழ முக்கியம். வாழ்வின் முக்கியம் சுவாசம். என் சுவாசமே என அதை டைட்டிலாக வைத்ததற்கு வாழ்த்துகள். இந்திய அளவில் மலையாளக் கலைஞர்கள் கொண்டாடப்படுகிறார்கள். அவர்கள் கதைக்கு மிகுந்த முக்கியத்துவம் தருவார்கள். கதையை விட்டு வெளியில் செல்ல மாட்டார்கள். அவர்களிடம் இருந்து தமிழ் சினிமாக்காரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்றார்.

தயாரிப்பாளர் கே. ராஜன் பேசும்போது, மலையாளத்தில் படமெடுக்கிறவர்கள் நல்ல தமிழ் டைட்டில் வைக்கிறார்கள் ஆனால் தமிழில் ஆங்கில டைட்டில் வைக்கிறார்கள். எங்கு போனது தமிழ்ப்பற்று. மலையாள சினிமாவில் எப்பவும் கதைக்காகத்தான் ஹீரோ. ஹீரோவுக்காக படம் செய்ய மாட்டார்கள் அநாவசிய செலவு செய்ய மாட்டார்கள்.

இதையெல்லாம் தமிழ் சினிமா ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டும். தமிழ் சினிமாவிற்கு கடுமையான சென்சார் கெடுபிடிகள் இருக்கின்றன. ஆனால் வெப் சீரிஸ்க்கு சென்சார் இல்லை அதில் அவ்வளவு கெட்ட வார்த்தைகள் இருக்கின்றன. மத்திய அரசு வெப் சீரிஸிற்கும் சென்சார் கொண்டு வர வேண்டும் என்றார்.


Next Story