லிவ் இன், மதமாற்றம், திருமணம், கர்ப்பம்... - சீரியல் நடிகர் கணவர் அடித்து துன்புறுத்தல்; கதறும் தமிழ் சீரியல் நடிகையின் வீடியோ
காதல் திருமணம் செய்துகொண்ட கணவன் தன்னை அடித்து துன்புறுத்துவதாக பிரபல சீரியல் நடிகை திவ்யா கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்டுள்ளார்.
சென்னை,
சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் நடித்து அறிமுகமானவர் அர்ணவ். இவரை போலவே பல சீரியல்களில் நடித்து அறிமுகமானவர் திவ்யா ஸ்ரீ. சீரியலில் நடித்தபோது அர்ணவை திவ்யா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
நைனா முகமது என்ற அர்ணவை கடந்த 7 ஆண்டுகளுக்கு மேலாக சின்னத்திரை நடிகை திவ்யா காதலித்து வந்தார். நடிகை திவ்யாவை இஸ்லாமிய மதத்திற்கு மாற்றிய பிறகு அர்ணவ் திருமணம் செய்துள்ளார்.
இந்த சூழ்நிலையில் தான் 3 மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், கணவர் அர்ணவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் நடிகை திவ்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.
வேறொரு நடிகையுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட தன் கணவரை தட்டிக்கேட்டதால் சண்டை சச்சரவு ஏற்பட்டுள்ளதாக நடிகை திவ்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக நடிகை திவ்யா வெளியிட்டுள்ள வீடியோவில், நான் திவ்யா. சமீபத்தில் எனக்கும் சீரியல் நடிகர் அர்ணவ்க்கும் திருமணம் நடைபெற்றது.
2017-ம் ஆண்டு நானும் அர்ணவும் ஒரே சீரியலில் நடித்தோம். அப்போது எங்களுக்குள் நட்பு தொடங்கி 5 ஆண்டுகளாக நாங்கள் லிவ் இன் உறவில் 'திருமணம் அற்ற உறவு' இருந்தோம். 2 ஆண்டுகளுக்கு முன் ஒரு வீடு வாங்கினோம். அதற்கு நான் பண உதவி அளித்தேன்.
கொரோனா ஊரடங்கு நேரத்தில் அர்னவிற்கு எந்த வேலையும் கிடைக்கவில்லை. 2 ஆண்டுகளாக வீட்டிலேயே இருந்தார். நான் அந்த நேரத்தில் சீரியல் நடித்ததால் வீட்டு கடன், அர்ணவ் வாங்கிய கடன் எல்லாவற்றையும் நான் தான் அடைத்து வந்தேன். அர்ணவ்விற்கும் செலவிற்கு தேவையான பணம் கொடுத்து வந்தேன். ஆனால், திருமணமானதை யாரிடமும் கூற வேண்டாமென அர்ணவ் கூறினான். அதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. ஆனால், சீரியலில் நடிக்கும் மற்றொரு நடிகையுடன் அர்ணவிற்கு தொடர்பு உள்ளது என சிலர் கூறினர். அதனால், நான் பயந்துகொண்டு நாங்கள் கல்யாணம் செய்துகொண்ட வீடியோ, புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பதிவிட்டேன். நான் அவ்வாறு செய்த உடன் அந்த பதிவை நீக்க அரணவ் எனக்கு தொந்தரவு கொடுத்தான். அதை நீக்கவில்லை என்றால் எங்கள் வீட்டில் உன்னை சேர்க்கமாட்டார்கள் என்று கூறினான். சமீபத்தில் கர்ப்பமடைந்ததையும் சமூகவலைதளத்தில் தெரிவித்தேன். அதன் பின் தொந்தரவு அதிகமானது. நீ கர்நாடகாவில் இருந்து வந்து இப்படி செய்கிறாய் அல்லவா? இது என் ஊர்... இது என்னுடைய தமிழ்நாடு... இப்போது நான் அழைத்தால் நிறைய பேர் வருவார்கள் என்றான்' என வீடியோவில் தெரிவித்துள்ளார்.
திவ்யா வெளியிட்ட மற்றொரு வீடியோவில், எனது கணவர் என்னை அடித்ததால் நான் கிழே விழுந்துவிட்டேன். அதில் எனது வயிற்றில் அடி பட்டுள்ளது. காலால் மிதித்தார். வலி தாங்க முடியாமல் நான் அங்கேயே மயங்கி விழுந்துவிட்டேன். என்ன ஆனது என்றே தெரியவில்லை. சிறிது நேரம் கழித்து தான் எனக்கு நினைவு வந்தது.
வயிறு வலியாக இருந்தது. ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது. என்னை தாக்கிய அர்ணவ் வீட்டை விட்டு வெளியே சென்றதால் அவனை தொடர்பு கொள்ளமுடியவில்லை. எனது நண்பர்களை தொடர்பு கொண்டால் அவர்கள் படப்பிடிப்பில் இருந்ததால் அவர்களையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை.
தற்போது நான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எப்போது வேண்டுமானாலும் எனது கரு கலைய வாய்ப்பு உள்ளது என டாக்டர்கள் கூறுகின்றனர். எல்லாமே அவனுக்காக நான் செய்துகொண்டிருந்தேன். என்னை அவன் பிளாக் செய்தாலும் தவிர்த்தாலும் அவனுக்காக காத்திருந்தேன். இப்போதும் அவனை விட்டால் எனக்கு வாழத்தெரியாது. என் கணவர் எனக்கு வேண்டும். என் குழந்தைக்கு எதுவும் நடக்கக்கூடாது என்று வேண்டிக்கொள்ளுங்கள்' என தெரிவித்தார்.
இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் நடிகை திவ்யா அனுமதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு சென்ற போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, ஏற்கனவே திருமணமாகி குழந்தை இருப்பதை நடிகை திவ்யா தன்னிடமிருந்து மறைத்துவிட்டதாகவும், அவரை தான் தாக்கவே இல்லை என்றும் அர்ணாவ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.