'பிரேமலு' படத்தின் தமிழ் டிரைலர் வெளியானது


பிரேமலு படத்தின் தமிழ் டிரைலர் வெளியானது
x

சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'பிரேமலு' திரைப்படம் தமிழிலும் வெளியாக உள்ளது.

சென்னை,

கடந்த பிப்ரவரி மாதம் 9-ம் தேதி மலையாளத்தில் கிரிஷ் இயக்கத்தில் விஷ்ணு விஜய் இசையில் வெளியான திரைப்படம் 'பிரேமலு'. இந்த படத்தில் மமிதா பைஜூ, நஸ்லேன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ரூ.3 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த படம் ரூ.100 கோடிக்கும் மேல் வசூல் செய்ததாக கூறப்படுகிறது.

அதிக வசூல் செய்யப்பட்ட மலையாள சினிமா வரிசையில் இந்த படம் இடம்பெற்றுள்ளது. சென்னை மற்றும் பிற மாவட்டங்களிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. சமீபத்தில் தெலுங்கில் வெளியான 'பிரேமலு' திரைப்படம் 15-ந்தேதி தமிழிலும் வெளியாகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் தமிழ் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story