தன்ஷிகா நடித்துள்ள 'தி புரூப்' படத்தின் டிரைலர் வெளியானது


தன்ஷிகா நடித்துள்ள தி புரூப் படத்தின் டிரைலர் வெளியானது
x

'ஆக்சன்' படமாக உருவாகியுள்ள 'தி புரூப்' படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்கியுள்ளார்.

சென்னை,

மாஞ்சா வேலு, பேராண்மை, கபாலி, இருட்டு உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சாய் தன்ஷிகா. இவர் தற்போது கோல்டன் ஸ்டூடியோஸ்-23 என்ற பட நிறுவனம் சார்பில் கோமதி சத்யா தயாரிக்கும் 'தி புரூப்' என்ற புதிய படத்தில் நடித்துள்ளார். 'ஆக்சன்' படமாக உருவாகியுள்ள இந்த படத்தை இயக்குனர் ராதிகா மாஸ்டர் இயக்கியுள்ளார்.

மேலும் இந்த படத்தில் ரித்விகா, அசோக், ருத்வீர் வரதன், இந்திரஜா, மைம் கோபி, மாரிமுத்து, ராஜ சிம்மன், அஷ்மிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 'தி புரூப்' திரைப்படம் இந்த மாதத்தில் (ஏப்ரல்) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story