சுரேஷ் கோபி நடித்துள்ள 'வராஹம்' படத்தின் டீசர் வௌியானது


சுரேஷ் கோபி நடித்துள்ள வராஹம் படத்தின் டீசர் வௌியானது
x

சுரேஷ் கோபி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வராஹம்’படத்தின் டீசர், அவரது பிறந்தநாளையொட்டி வெளியாகி இருக்கிறது.

மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சுரேஷ் கோபி. 80-களில் தொடங்கி இன்று வரை அவர் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். மலையாளம் மட்டுமன்றி தமிழிலும் அவர் பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அஜித்துடன் தீனா, சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வௌியான ஐ படத்தில் இவர் வில்லனாக நடித்திருப்பார். அப்படத்தில் இவரது நடிப்பு மிரட்டலாக இருந்தது.

ஆக்ஷன் ஹீரோவாக மலையாளத்தில் பல படங்களிலும், குணச்சித்திர நடிகராகவும் நடித்திருக்கிறார். தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டவர் சுரேஷ் கோபி. நடிப்பு மட்டுமன்றி கடந்த சில ஆண்டுகளாக அவர் அரசியலிலும் அதிக ஆர்வம் செலுத்தி வந்தார். அந்த வகையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கேரள மாநிலம் திருச்சூர் தொகுதியில் பா.ஜ.க சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில், அரசியல் வெற்றிக்கு பின் சுரேஷ் கோபி நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'வராஹம்'. மலையாளத்தில் சனல் வி தேவன் இயக்கத்தில் சுரேஷ் கோபி நடித்திருக்கும் 'வராஹம்' திரைப்படத்தில், சுராஜ் வெஞ்சரமூடு, கௌதம் வாசுதேவ் மேனன், நவ்யா நாயர், சராயு மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் சுரேஷ் கோபியின் பிறந்தநாளை ஒட்டி, 'வராஹம்' திரைப்படத்தின் டீசர் இணையத்தில் வௌியாகி இருக்கிறது.

1 More update

Next Story