மகேந்திரன் நடிக்கும் 'அர்த்தம்' படத்தின் டீசர் வெளியானது..!


மகேந்திரன் நடிக்கும் அர்த்தம் படத்தின் டீசர் வெளியானது..!
x

நடிகர் மகேந்திரன் நடித்துள்ள 'அர்த்தம்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

மணிகாந்த் தல்லாகுடி இயக்கத்தில் நடிகர் மகேந்திரன் நடித்துள்ள திரைப்படம் 'அர்த்தம்'. இந்த படத்தில் நடிகை ஷ்ரத்தா தாஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகும் ஷ்ரத்தா தாஸ், மாயா என்ற மனநல ஆய்வாளராக நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் சாஹிதி அவஞ்சா, நந்தா துரைராஜ், அஜய் மற்றும் அமானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 'அர்த்தம்' திரைப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இசையமைத்துள்ளார். ராதிகா ஸ்ரீனிவாஸ் தயாரித்துள்ளார்.

சஸ்பென்ஸ் திரில்லராக தயாராகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியுள்ளது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டீசர் தற்போது ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.

1 More update

Next Story