'சப்தம்' படத்தின் டீசர் நாளை வெளியாகிறது


சப்தம் படத்தின் டீசர் நாளை வெளியாகிறது
x
தினத்தந்தி 11 April 2024 10:00 PM IST (Updated: 12 April 2024 11:09 AM IST)
t-max-icont-min-icon

இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாக சப்தம் படத்தில் நடித்துள்ளார்

சென்னை,

இயக்குனர் அறிவழகன் கடைசியாக அருண் விஜய் நடிப்பில் தமிழ் ராக்கர்ஸ் என்ற வெப்சீரிஸை இயக்கியிருந்தார். இதைதொடர்ந்து 7ஜி பிலிம்ஸ் சிவா தயாரிப்பில் இயக்குனர் அறிவழகனின் இயக்கத்தில் நடிகர் ஆதி கதாநாயகனாக சப்தம் படத்தில் நடித்துள்ளார்

இதன் மூலம் இயக்குனர் அறிவழகனின் முதல் படமான ஈரம் படத்துக்கு பின்னர் 14 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஆதியுடன் கூட்டணி அமைத்துள்ளார். மேலும் ஈரம், வல்லினம், ஆறாது சினம் என தொடர்ந்து மூன்று படங்களில் அறிவழகனுடன் பணியாற்றிய இசையமைப்பாளர் தமனும், இந்த படத்தில் அவருடன் மீண்டும் கைகோர்த்துள்ளார்.லக்ஷ்மி மேனன் , சிம்ரன், லைலா மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

ஈரம் படத்தை போலவே இந்த படமும் சஸ்பென்ஸ், திகில் பாணியில் உருவாகி உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் டீசர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


Next Story