'வடக்கன்' படத்தின் டீசர் வைரல்


வடக்கன் படத்தின் டீசர் வைரல்
x
தினத்தந்தி 24 April 2024 12:54 PM GMT (Updated: 24 April 2024 12:55 PM GMT)

'வடக்கன்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

சென்னை,

எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இயக்குனராக அறிமுகமாகியுள்ள வடக்கன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. வெண்ணிலா கபடி குழு, எம்டன் மகன், நான் மகான் அல்ல, பாண்டிய நாடு உள்ளிட்ட பல படங்களுக்கு வசனமும், அழகர் சாமியின் குதிரை படத்திற்கு கதை, வசனமும் எழுதிய எழுத்தாளர் பாஸ்கர் சக்தி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.

'டிஸ்கவரி சினிமாஸ்' மூ.வேடியப்பன் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் குங்கும ராஜ் நாயகனாகவும், வைரமாலா நாயகியாகவும் நடித்துள்ளனர். இருவருமே இப்படத்தின் மூலம்தான் அறிமுகமாகிறார்கள். கர்நாடக இசைக் கலைஞர் எஸ்.ஜே.ஜனனி இப்படத்திற்கு இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய, நாகூரன் படத்தொகுப்பு செய்கிறார்.

இந்நிலையில் 'வடக்கன்' படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. தற்போது, இணையத்தில் இந்த டீசர் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்களை மையமாக வைத்து காமெடியான கதைக்களத்தில் அமைந்து இருக்கிறது வடக்கன் திரைப்படம்.


Next Story