'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானது


மஞ்சுமெல் பாய்ஸ் படத்தின் தெலுங்கு டிரைலர் வெளியானது
x

மலையாள சினிமாவில் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' பெற்றுள்ளது.

சென்னை,

இயக்குனர் சிதம்பரம் இயக்கத்தில் உருவாகிய திரைப்படம் 'மஞ்சுமெல் பாய்ஸ்'. இப்படத்தில் நடிகர்கள் சவுபின் சாகிர், ஸ்ரீநாத் பாசி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்தனர். கொடைக்கானல் குணா குகையை மையப்படுத்தி கடந்த மாதம் 23-ம் தேதி வெளியான இந்த படம் கேரளாவை விட தமிழகத்தில் பெரும் வெற்றியைப் பெற்று அதிக வசூலைக் குவித்தது.

மலையாள சினிமாவில் உலக அளவில் ரூ.200 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை 'மஞ்சுமெல் பாய்ஸ்' பெற்றுள்ளது. இந்த படத்தின் கதை ஒரு உண்மை சம்பவம் ஆகும். கேரளாவிலிருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்து குணா குகைக்குள் கால் தவறி விழுந்த நண்பனை உயிருடன் மீட்டு காப்பாற்றி அவரை மீண்டும் கேரளாவுக்கு அழைத்துச் செல்வதுதான் இந்த படத்தின் கதைக்களமாகும்.

இந்த படம் மலையாளம், தமிழில் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், வருகிற ஏப்ரல் 6-ம் தேதி தெலுங்கில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் 'மஞ்சுமெல் பாய்ஸ்' படத்தின் தெலுங்கு டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story