தாய்லாந்து நாட்டிற்கு சென்ற 'தளபதி - 68' படக்குழு


தாய்லாந்து நாட்டிற்கு சென்ற தளபதி - 68 படக்குழு
x

'தளபதி - 68' படக்குழுவானது படப்பிடிப்பிற்காக வெளிநாட்டிற்கு சென்றுள்ளது.

சென்னை,

'லியோ' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கிறார். 'தளபதி 68' என்று தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் விஜயதசமி நாளில் படத்தின் பூஜை நடத்தப்பட்டது. இந்த வீடியோவை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டது.

இந்த படத்தில் பிரபு தேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி, மோகன், யோகி பாபு, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த ஆகாஷ் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். இந்த படத்தின் பாடலாசிரியராக மதன் கார்க்கி இணைந்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் தளபதி 68 படக்குழு தாய்லாந்து நாட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளது.


Next Story