வெளியானது 'தளபதி 68' அப்டேட்: ரசிகரின் கேள்விக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதில்...!


வெளியானது தளபதி 68 அப்டேட்: ரசிகரின் கேள்விக்கு இயக்குனர் வெங்கட் பிரபு பதில்...!
x

நடிகர் விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க உள்ளார்.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து விஜய்யின் 68-வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

'தளபதி 68' என தற்காலிகமாக பெயர் வைத்துள்ள இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி இப்படத்தில் பயன்படுத்தப்படவுள்ளது. இதற்காக படக்குழு சமீபத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றிருந்தனர்.

இந்நிலையில், எக்ஸ் (டுவிட்டர்) சமூக வளைத்தளத்தில் ரசிகர் ஒருவர் 'தளபதி 68' படத்தின் அப்டேட் கேட்டிருந்தார். அதற்கு இயக்குனர் வெங்கட் பிரபு 'விரைவில்' என பதில் அளித்து உள்ளார். அந்த பதிவை தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.




Next Story