'தங்கலான் சம்பவம் விரைவில்..' - ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!


தங்கலான் சம்பவம் விரைவில்.. - ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!
x

‘தங்கலான்’ படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்த நிலையில், பொங்கல் பண்டிகையையொட்டி படம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 'தங்கலான்' படத்தின் டீசர் விரைவில் வெளியாக உள்ளதாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "தங்கலான் சம்பவம் விரைவில்... அசத்தலான டீஸர் விரைவில் வெளியாக உள்ளது" என பதிவிட்டுள்ளார்.


#thangalaan sambavam soon . One extraordinary teaser on its way soon …. @beemji @StudioGreen2 @chiyaan ….

— G.V.Prakash Kumar (@gvprakash) October 20, 2023 ">Also Read:Next Story