யோகி பாபு நடிக்கும் 'தூக்குதுரை' படத்தில் இருந்து 'தாறுமாறு ஸ்டார்ஸ்' பாடல் வெளியீடு


யோகி பாபு நடிக்கும் தூக்குதுரை படத்தில் இருந்து தாறுமாறு ஸ்டார்ஸ் பாடல் வெளியீடு
x

‘தூக்குதுரை’ படத்தில் இருந்து ‘தாறுமாறு ஸ்டார்ஸ்’ பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

சென்னை,

டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் யோகிபாபு - இனியா நடிக்கும் படம் 'தூக்குதுரை'. அட்வென்ச்சர் திரில்லர் படமான 'ட்ரிப்' படப்புகழ் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த `தூக்குதுரை' திரைப்படம், மூன்று விதமான காலங்களில் அதாவது 19-ம் நூற்றாண்டு, 1999 மற்றும் 2022 ஆகிய காலங்களில் கதை நடப்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தில் மொட்டை ராஜேந்திரன், மகேஷ், பால சரவணன், சென்றாயன், மாரிமுத்து, நமோ நாராயணன், அஷ்வின், சத்யா, சீனியம்மா, வினோத் தங்கராஜூ, சிந்தாலப்பட்டி சுகி, ராஜா வெற்றி பிரபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு கே.எஸ். மனோஜ் இசையமைக்க, ரவி வர்மா கே ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்த படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'தாறுமாறு ஸ்டார்ஸ்' என்ற அந்த பாடலை 'தேவராளன் ஆட்டம்' புகழ் யோகி சேகர் பாடியுள்ளார். இந்த பாடலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.


1 More update

Next Story