இன்று வெளியாகிறது 'விஜய் 68' படத்தின் 2வது லுக்... எதிர்பார்ப்பை எகிற வைத்த படக்குழு...!


இன்று வெளியாகிறது விஜய் 68 படத்தின் 2வது லுக்... எதிர்பார்ப்பை எகிற வைத்த படக்குழு...!
x
தினத்தந்தி 1 Jan 2024 9:00 AM GMT (Updated: 1 Jan 2024 12:49 PM GMT)

'தளபதி 68' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் நேற்று மாலை வெளியானது.

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் நடிகர் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் டிசம்பர் 31ந் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்தவகையில் நேற்று மாலை 6 மணிக்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டைட்டில் வெளியானது.

அதன்படி இந்த படத்துக்கு 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (The Greatest Of All Time) என பெயரிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் இடம்பெற்றுள்ளார். அந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் 2வது லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் வலைதள பதிவில், 'எனக்கு மிகவும் பிடித்த 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' படத்தின் 2வது லுக் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும்' என தெரிவித்துள்ளார். இவரின் இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.


Next Story