'லியோ' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!


லியோ படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியானது..!
x
தினத்தந்தி 27 Sept 2023 7:11 PM IST (Updated: 27 Sept 2023 7:15 PM IST)
t-max-icont-min-icon

விஜய் நடித்துள்ள 'லியோ' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை,

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

'லியோ' படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. 'லியோ' திரைப்படம் அக்டோபர் மாதம் 19-ம் தேதி வெளியாக உள்ளது. 'லியோ' படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தப்போவதில்லை என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக நடிகர் விஜய் பிறந்தநாள் அன்று 'லியோ' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. இந்த நிலையில் 'லியோ' படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, 'பேடஸ்' என்ற பாடல் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடலை விஷ்ணு எடவன் எழுதியுள்ளார்.


1 More update

Next Story