நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும் - தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் நம்பிக்கை


நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும் - தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் நம்பிக்கை
x

நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும் என்று தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 67-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்க தலைவர் நாசர் தலைமை தாங்கினார். இந்த பொதுக்குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால் வரவேற்புரை நிகழ்த்தினார். கட்டிட நிதி மற்றும் எதிர்கால பொருளாதார திட்டமிடல் குறித்து பொருளாளர் கார்த்தி விளக்கம் அளித்தார்.

கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் குஷ்பு, கோவை சரளா, ராஜேஷ், அஜய் ரத்தினம், பசுபதி, ஜூனியர் பாலையா, லதா சேதுபதி, பிரசன்னா, நந்தா, ரமணா, தளபதி தினேஷ், சரவணன், பிரேம்குமார், சீனிவாச ரெட்டி, ரத்தின சபாபதி, பிரகாஷ், வாசுதேவன், ஹேமச்சந்திரன், காளி முத்து உள்பட முன்னணி நடிகர்-நடிகைகள், நாடக கலைஞர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், நடிகர் சங்க கட்டிட கனவு இந்த ஆண்டு நிச்சயமாக நிறைவேறும் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர் கூறும்போது, "தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்கு சட்டரீதியாக எந்த தடையும் இல்லை. நிதி பற்றாக்குறையால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை

நடிகர் சங்க கட்டிடம் கட்ட ரூ.40 கோடி கடன் வாங்க பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பெரிய நடிகர்களிடம் நிதியுதவி பெற முடிவெடுத்துள்ளோம். இது தொடர்பான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் நல்ல செய்தி வரும்" என்று கூறினார்.


Next Story