'ஜெயிலர்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 525 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை!


ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 525 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை!
x

‘ஜெயிலர்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 525 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

சென்னை,

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்தார். இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

படம் வெளியான நாள் முதல் வசூலில் ஜெயிலர் திரைப்படம் பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்த நிலையில், தற்போது திரைப்படதின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடுள்ளது.

அதில், ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 525 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


Next Story